
நட்சத்திர தம்பதிகள், பெரும் பணக்காரர்கள் ஆகியோர் தங்கள் குழந்தைகளை பராமரிக்க ஒரு குழந்தை பராமரிப்பாளரை நியமிப்பது வழக்கம். அந்த வகையில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி கரீனா கபூர் மற்றும் சைஃப் அலி கானின் மகன்களை வளர்த்தவர் பிரபல நர்ஸ் லலிதா சில்வா.
இவர் தான் ஆனந்த் அம்பானியை சிறுவயதில் கவனித்து வந்தார் என்பது பலருக்கும் தெரியாது.. தற்போது 29 வயதாகும் ஆனந்த் அம்பானிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த பிரம்மாண்ட திருமணத்தில் லலிதா சில்வா கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், அனந்தின் த்ரோபேக் படத்தையும் லலிதா சில்வா பகிர்ந்துள்ளார். மேலும் ஆனந்த் தனது குழந்தைப் பருவத்தில் "மிகவும் நல்ல பையனாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிஸ்னி வேர்ல்ட் பாரிஸுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது எடுக்கப்பட்ட த்ரோபேக் படத்தை பகிர்ந்துள்ளார். டிஸ்னி வேர்ல்டில் ஆனந்த் அம்பானி தனது சகோதர சகோதரிகளான ஆகாஷ் மற்றும் இஷாவுடன் இருப்பதை அதில் பார்க்க முடிகிறது..
லலிதா சில்வாவின் இன்ஸ்டா பதிவில் “ஆனந்த் சிறுவயதில் மிகவும் நல்ல பையன். இப்போது வரை அவர் குடும்பம் மற்றும் அவரது சமூகக் குழுவில் உள்ள அனைவராலும் நேசிக்கப்படுகிறார்” என்று குறிப்பிட்டார். மேலும் பல ஆண்டுகளாக அம்பானி குடும்பத்தினர் தன்னிடம் காட்டிய அன்பு மற்றும் மரியாதைக்கும் லலிதா சில்வா நன்றி தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில் “ ஆனந்த் அம்பானியும் அம்பானி குடும்பமும் என் வாழ்க்கையில் கொண்டு வந்த மகிழ்ச்சி மற்றும் அன்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் பகிர்ந்து கொண்ட இனிமையான நினைவுகள் மற்றும் அன்பான தருணங்களை நான் மதிக்கிறேன், மேலும் அவர்களின் அசைக்க முடியாத அன்பு மற்றும் மரியாதைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அவர்களின் கருணையும், பெருந்தன்மையும் என்னை ஊக்கப்படுத்துகின்றன. என் வாழ்க்கையில் நீதாவும், முகேஷ் அம்பானி சாரும் வந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்.
அவர்கள் இன்னும் என்னை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக அரவணைத்து வருகின்றனர். ஆனந்த் மற்றும் ராதிகா இருவரும் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அம்பானி குடும்பத்தின் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் ஆடம்பரமான திருமணம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது. அம்பானி குடும்பம் நான்கு மாதங்களில் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம், போஸ்ட் வெட்டிங் கொண்டாட்டம் என பல நிகழ்ச்சிகளை நடத்தியது. இந்த நிகழ்ச்சிகளுக்காக அம்பானி குடும்பத்தினர் கோடிக்கணக்கில் செலவு செய்தனர். அந்த வகையில் ஆனந்த் - ராதிகா திருமணத்திற்கு ரூ.5000 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது.
லலிதா சில்வா தற்போது ராம் சரண் மற்றும் உபாசனாவின் மகள் க்ளின் காரா கொனிடேலாவின் செவிலியராக பணியாற்றி வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில், தான் வளர்க்கும் உதவிய குழந்தைகளின் நினைவுகள் பகிர்ந்து வரும் அவர் அவர்களது குடும்பத்தினருடன் வெளிநாட்டு பயணங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.