AK 61 Update: ஹோட்டலில் ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விடும் அஜித்....செம்ம ஸ்மார்ட் லுக்...வைரல் போட்டோ..

Anija Kannan   | Asianet News
Published : Jun 11, 2022, 03:50 PM IST

AK 61 Update: அஜித் தான் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

PREV
14
AK 61 Update: ஹோட்டலில் ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விடும் அஜித்....செம்ம ஸ்மார்ட் லுக்...வைரல் போட்டோ..
AK61

வலிமை வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் தற்போது அஜித் 61 வது படம் உருவாகி வருகிறது. மீண்டும் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் AK 61 படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘அஜித் 61’ திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

24
AK61

போனி கபூர் தயாரிப்பில், வெளியாகும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படப்புகழ் மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் கோக்கன், நடிகர் வீராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். வீரா' என தலைப்பு வைத்துள்ள இந்த திரைப்படத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

34
AK61

வங்கிக்கொள்ளை மையமாக வைத்து உருவாகி வரும்  இந்த படத்தில் அஜித், கல்லூரிப் பேராசிரியராக   நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நிரவ் ஷா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை அடித்து அஜித் விக்னேஷ் சிவனுடன் 62 வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதோடு 63,64 வது படத்திற்கான கதையும் ரெடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

44
ajith


இந்த நிலையில், அஜித் AK 61 படப்பிடிப்பிற்காக ஐதராபாத் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அஜித்திற்கு பிரத்தேகமாக கேக் செய்துள்ளனர். இதனை, அஜித் கட் செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு அன்புடன் ஊட்டினார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. 
 மேலும் படிக்க...AK 61 Title Update: ஏகே 61 படத்தின் தலைப்பு சூப்பரா இருக்கே? பழைய சென்டிமென்ட்டை மீண்டும் கையில் எடுத்த அஜித்

Read more Photos on
click me!

Recommended Stories