Malavika Mohanan : கல்லூரி விழாவில் கருப்பு சேலையில்.. மனதை கொள்ளைகொண்ட மாளவிகா மோகனன் - வைரல் போட்டோஸ்!
Ansgar R |
Published : Apr 28, 2024, 05:58 PM IST
Actress Malavika Mohanan : கேரளாவில் பிறந்து, மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி, அதன் பிறகு தமிழ் திரை உலகில் அறிமுகமான நாயகி தான் மாளவிகா மோகனன். தற்பொழுது பல மொழிகளில் கலக்கி வருகிறார்.
மலையாள திரை உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர் கே.யு மோகனன் அவர்களுடைய மகள் தான் மாளவிகா மோகனன் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள பையனூர் என்கின்ற ஊரில் பிறந்தார்.
மலையாள மொழிகளில் நடிக்க துவங்கிய மாளவிகா, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பேட்ட" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
33
Malavika in Kanyakumari
தற்பொழுது பா. ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.