செம்ம கியூட்...கமல், விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட டாப் ஹீரோயினா இவங்க?

Published : May 19, 2024, 02:43 PM IST

தென்னிந்திய திரையுலகில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான, நடிகை காஜல் அகர்வாலின் குழந்தை பருவ புகைப்படங்களின் தொகுப்பு இதோ.  

PREV
16
செம்ம கியூட்...கமல், விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட டாப் ஹீரோயினா இவங்க?

38 வயதிலும் செம்ம பிட்டாக பல, இளம் ஹீரோயின்களுக்கு நடிப்பிலும், அழகிலும் டஃப் கொடுத்து வரும் காஜல் அகர்வால் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் பூர்வீகம் அமிர்தசரஸ். பின்னர் தன்னுடைய தந்தையின் தொழில் ரீதியாக இவரின் குடும்பம் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர்.

26

காஜல் அகர்வாலின் தந்தை வினய் அகர்வால், ஜவுளி விற்பனையில் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவர். இவரின் தாயார் சுமன் அகர்வால் ஒரு மிட்டாய் வியாபாரி. காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் என்கிற தங்கை ஒருவர் உள்ளார். இவர் தான் பல வருடங்களாக காஜல் அகர்வாலின் கணக்கு வழக்கு விபரங்களை ஒரு மேலாரலாக இருந்து கவனித்து வருகிறார்.

Vijay Antony: விஜய் ஆண்டனியின் செயல் தான் அவருடைய மகள் மீரா தற்கொலைக்கு காரணம்! பரபரப்பை ஏற்படுத்திய சுசி!

36

காஜல் அகர்வால் மும்பை கோட்டையில் உள்ள செயின்ட் ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற நிலையில், பின்னர் மும்பையில் BBA படித்து முடித்தார். இதை தொடர்ந்து MBA படிக்க தயாராகி கொண்டிருந்த போது தான், ஹிந்தி படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார்.

46

பாலிவுட் படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும், தெலுங்கில் இவர் நடித்த லட்சுமி கல்யாணம், சண்டா மாமா போன்ற படங்கள் அடுத்தது ஹிட் அடித்தது. பின்னர் தமிழிலும் நடிகர் பரத்துக்கு ஜோடியாக பழனி படத்தில் அறிமுகமானார். தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து ராம் சரண், நாகர்ஜுனா, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.

Meena: 47 வயதிலும் 25 வயது லுக்... ப்ளூ லகூன் ஐஸ்லாந்தில் வெகேஷன் சென்று வெளியிட்ட முத்த புகைப்படம்!

56

கடந்த 2020-ஆம் ஆண்டு தன்னுடைய காதலர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு தற்போது நீல் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். குழந்தை பெற்ற பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் காஜல், தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

66

இந்த திரைப்படத்தை ஜூன் மாதம் வெளியிட உள்ளது படக்குழு. இப்படத்தின் புரோமோஷன் பணிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் கமல்ஹாசன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வரும் காஜல் தற்போது உமா, சத்ய பாமா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். குழந்தையாக இருக்கும் போதே செம்ம கியூட்டாக இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் போட்டோஸ், சமூக வலைத்தளத்தில் பல ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

அந்த குழந்தை யார் தெரியுமா? ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்ய இது தான் காரணம்! மனம் திறந்த சங்கீதா!

click me!

Recommended Stories