நடிப்பு, நடிகர் சங்க பொதுச்செயலாளர், அரசியல் என கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கில்லியாக நினைப்பவர் விஷால். கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து மோசமான தோல்வியை தழுவிய நிலையில், இந்த ஆண்டு விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் விஷாலின் சினிமா கேரியரை தூக்கி நிறுத்தியது. ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைத்து இந்த படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.