தென்னிந்திய திரையுலகில் மிகவும் திறமையான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் சித்தார்த். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் 2003-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான சித்தார்த், நடிக்க துவங்கியதும் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதுவரை, ஸ்ருதிஹாசன், மற்றும் சமந்தா ஆகியோரை காதலித்து பிரேக் அப் செய்துள்ள சித்தார்த் தன்னுடைய 40 வயதுக்கு பின்னர், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை அதிதி ராவை காதலித்து வருவதாக கடந்த இரண்டு வருடங்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்தது. மும்பையில் இருவரும் ஜோடியாக வலம் வருவது மட்டும் இன்றி, பிரபலங்களின் திருமணம், அவார்டு நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக ஆஜராகி காதலை உறுதி செய்தனர்.
ஆனால் தற்போது இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக சித்தார்த் அதிதி ராவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளளார். அதில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் இன்னும் இவர்களுக்கு திருமணம் ஆக வில்லை என்பது தெளிவாகியுள்ளது. விரைவில் திருமணம் குறித்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.