நடிகர் அருண் விஜய் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு முன்பு காதலிக்காததற்கு அம்மா சொன்ன அந்த வார்த்தை தான் காரணம் என கூறியுள்ளார்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். தன்னுடைய தந்தை ஒரு நடிகர் என்பதால்... படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது. அதன்படி 1995 ஆம் ஆண்டு 'முறை மாமன்' என்கிற படத்தில், ஹீரோவாக அறிமுகமானார்.
26
Arun Vijay movie List:
இதை தொடர்ந்து, பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, கண்ணால் பேசவா, அன்புடன், முத்தம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்த போதிலும், இவரால் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இடம் பிடிக்க முடியவில்லை. அதே போல் இவர் நடித்த படங்களும் அடுத்தடுத்து படு தோல்வியை சந்தித்தது.
திரையுலகில் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபிக்க வேண்டும் என, போராடி வந்த அருண் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது, தல அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படம் தான். இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார்.
46
Leading Actor Arun Vijay:
இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர்... அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட் லிஸ்டில் இணைந்து, அருண்விஜய்யை முன்னணி நடிகர் லிஸ்டில் இணைத்தது. தற்போது இவரின் கைவசம் பார்டர், மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே, மற்றும் வணங்கான் ஆகிய படங்கள் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் அருண் விஜய் கொடுத்த பேட்டியில் தன்னை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், தொகுப்பாளர் திருமணத்திற்கு முன்பு யார் மீதாவது கிரஷ் அல்லது காதல் வந்துள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்க்கு அருண் விஜய், "நான் படிக்கும் போது, என்னுடைய அம்மா, ஜாதகத்தை பார்த்து விட்டு... நீ யாரையாவது காதலிச்சா போலீஸ், அடிதடி போன்ற பிரச்சனைகள் வரும் என கூறினார்".
66
Arun Vijay love Life:
அப்போதில் இருந்தே காதலிக்க வேண்டும் என ஆசை வந்தால் கூட அவங்க சொன்ன இந்த வார்த்தை தான் முதலில் நினைவுக்கு வரும். அவங்க சொன்னது உண்மையா - இல்ல சும்மா என்னை பயமுறுத்த இப்படி சொன்னார்களா என தெரியவில்லை. இந்த வார்த்தையை கூறிய பின்னர் யாரையும் நான் காதலிக்கவில்லை. அப்பா - அம்மா பார்த்து முடிவு செய்த ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார்.