UAE Hindu Mandir
இந்த கோவில் இந்தியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய மற்றும் அழகான இந்து கோவில்களில் ஒன்றாகவும், மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோவிலாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது, அபுதாபியில் கோயில் கட்டுவதற்கு நிலம் ஒதுக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்தது.
Radhika
இந்திரா காந்திக்குப் பிறகு 34 ஆண்டுகளில் இந்த மூலோபாய வளைகுடா நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் பிரதமரின் பயணம் இராஜதந்திர ரீதியாக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனையடுத்து கடந்த பிப்ரவரி 2018ல், கோயிலுக்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார், டிசம்பர் 2019 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த கோயில் 5.4 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ. 700 கோடி செலவில் கட்டப்படுகிறது.