ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியாகும், சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், குழந்தை நட்சத்திரம் என பல்வேறு பட்டியல்களின் கீழ் சிறந்த படைப்புகளுக்கும், கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி கௌரவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது மத்திய அரசு.
மற்ற மொழிகளில் வெளியான சிறந்த படிப்புகளுக்கும் தேசிய விருது கிடைத்தது. அந்த வகையில் கன்னட மொழியில் வெளியாகி, இந்திய அளவில் கவனிக்காட்ட திரைப்படமாக இருந்த, KGF 2 திரைப்படம், இரண்டு தேசிய விருதுகளை தட்டி தூக்கி உள்ளது. அதன்படி சிறந்த கன்னட படத்திற்கான விருதை KGF பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, சிறந்த அச்டின் இயக்கத்திற்கான விருதை, ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு பெற்றுள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை, நேற்று கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'ரகு தாத்தா' படத்தை தயாரித்த ஹேம்பலோ ஃபிலிம்ஸ் தான் தயாரித்து வருகிறது. யாஷ் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்திருந்த இந்த படம், ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க, யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர் என்பது குறிபிடித்தக்கது.
ஆண்டவருக்கே அல்வா கொடுத்துட்டாங்க... தேசிய விருதை மிஸ் பண்ணிய தமிழ் படங்கள் ஒரு பார்வை