Vidamuyarchi Update: தளபதிக்கே டஃபா? 'விடாமுயற்சி' படத்தில் அஜித்துடன் இணையும் 4 முன்னணி நச்சத்திரங்கள்!

Published : Sep 26, 2023, 09:00 PM IST

அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்க உள்ள நிலையில், இந்த படத்தில் நடிக்க உள்ள 4 பிரபலங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
14
Vidamuyarchi Update: தளபதிக்கே டஃபா? 'விடாமுயற்சி' படத்தில் அஜித்துடன் இணையும் 4 முன்னணி நச்சத்திரங்கள்!
Ajith Vidamuyarchi Movie:

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்க உள்ள 'விடாமுயற்சி' படத்தின் படம் குறித்து அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இதுவரை, படப்பிடிப்பு துவங்காதது, ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம் என்றாலும், படப்பிடிப்பு லேட்டாக துவங்கினாலும் அவுட் புட் சும்மா தரமாக இருக்கும் என நம்பிக்கையோடு கார்த்திருக்கின்றனர் அஜித்தின் ரசிகர்கள்.
 

24
Vidamuyarchi Shooting:

படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் படக்குழு ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில்,  இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது அபுதாபியில் உள்ளனர். அஜித்தும் படப்பிடிப்புக்கு தீயாக தயாராகி உள்ளார். மேலும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Vijayakanth: விஜயகாந்தின் Net Worth எவ்வளவு தெரியுமா? ரஜினி, கமல், விஜய் சொத்தில் கால்வாசி கூட இல்லையே பாஸ்!

34
Vidamuyarchi latest update:

அதே போல் இன்னும் சில நாட்களில், அஜித் மற்றும் இப்படத்தில் நடிக்க உள்ள முன்னணி நட்சத்திரங்கள் அபிதாபிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போது இந்த படம் குறித்த அதிரி புதிரி தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் அஜித்துடன் 4 முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

44
4 celebrities acting Vidamuyarchi:

அதன்படி, 'விடாமுயற்சி' படத்தில் அஜித்துடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆரவ் மற்றும் ஹூமா குரேஷி ஆகிய நான்கு நட்சத்திரங்கள் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே தளபதிக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் இந்த படத்திலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சிவாஜி, ரஜினிகாந்த், வஹீதா ரஹ்மான் உள்பட.. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற பிரபலங்களின் விவரம்!!
 

click me!

Recommended Stories