சீனாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி மாதம்) 'ஒன்பிளஸ் டர்போ 6' அறிமுகப்படுத்தப்பட்டது. சீனச் சந்தைக்கு மட்டுமே பிரத்யேகமான இந்த மொபைலுடன் 'ஒன்பிளஸ் டர்போ 6வி' மாடலும் வெளியானது. இதில் சமீபத்தில் வெளியான 'டர்போ 6வி' உட்பட இந்த வரிசையில் இதுவரை மொத்தம் 5 மாடல்கள் உள்ளன.
இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை 'டர்போ' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. அதன்படி, எதிர்பார்க்கப்படும் 'ஒன்பிளஸ் டர்போ 7' மொபைலின் அறிமுகக் காலம் ஆன்லைனில் கசிந்துள்ளது. அத்துடன், இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் கசிந்துள்ள நிலையில், முந்தைய மாடலை விட சக்திவாய்ந்த சிப்செட் மற்றும் புதிய கேமரா உட்பட பல மேம்பாடுகளுடன் இது வரவுள்ளது தெரியவந்துள்ளது.
24
அறிமுகக் காலம் & சிறப்பம்சங்கள்
சீன சமூக வலைத்தளமான 'வெய்போ'வில் (Weibo) டிப்ஸ்டர் 'ஸ்மார்ட் பிகாச்சு' (Smart Pikachu) என்பவர் ஒன்பிளஸ் டர்போ 7 பற்றிய முக்கிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வரும் டிசம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையாகும் பட்சத்தில், முந்தைய மாடலை விட ஒரு மாதத்திற்கு முன்பாகவே புதிய ஒன்பிளஸ் டர்போ சீரிஸை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
பிராஸசர் (Processor) - ஒன்பிளஸ் டர்போ 7 மாடலில், குவால்காமின் (Qualcomm) இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத ஆக்டா-கோர் 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 6' (Snapdragon 8 Gen 6) சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட சிறப்பான செயல்திறனை (Performance) வழங்கும்.
34
கேமரா & டிஸ்ப்ளே
கேமரா - இதன் பின்புறம் 200 மெகாபிக்சல் (200MP) கேமரா இடம்பெறும் எனக்கூறப்படுகிறது. இருப்பினும், முந்தைய மாடலைப் போலவே இதிலும் 'பெரிஸ்கோப் டெலிபோட்டோ' (Periscope Telephoto) கேமரா இடம்பெற வாய்ப்பில்லை.
டிஸ்ப்ளே & பாடி - இந்த போனில் புதிய டிஸ்ப்ளே பயன்படுத்தப்படவுள்ளது. இது குறிப்பிட்ட நேரங்களில் அதிகபட்சமாக 185Hz புதுப்பிப்பு வீதத்திலும் (Refresh Rate), மற்ற நேரங்களில் 165Hz வரையிலும் இயங்கும். மேலும், இதன் பின்புறம் கிளாஸ் பாடி (Glass Body) அமைப்பைக் கொண்டிருக்கலாம்.
ஒன்பிளஸ் டர்போ 7 மாடலானது, கடந்த ஜன.8-ஆம் தேதி சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் டர்போ 6-ன் தொடர்ச்சியாக வரவுள்ளது. டர்போ 6 மாடலின் ஆரம்ப வேரியண்ட் (12GB RAM + 256GB Storage) தோராயமாக ரூ. 30,000) என்ற விலையில் வெளியானது.