100W ஃபாஸ்ட் சார்ஜிங், 9,000mAh பேட்டரி: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஒன்பிளஸ் 16 சிறப்பம்சங்கள்!

Published : Nov 06, 2026, 06:02 PM IST

இந்தியாவில் விரைவில் வெளியாகிறதா ஒன்பிளஸ் 16? மும்பையில் நடந்த ரகசியக் கூட்டம், 9,000mAh பேட்டரி மற்றும் அதிர்ச்சி அளிக்கும் இந்திய விலை விவரங்களை பற்றி பார்போம்.

PREV
14
ஒன்பிளஸ் 16 இந்திய அறிமுகம்

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மாடலான 'ஒன்பிளஸ் 16' (OnePlus 16) ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தற்போது 'ஒன்பிளஸ் 15' மாடலே நிறுவனத்தின் முதன்மை ஃபிளாக்ஷிப் போனாக விற்பனையில் உள்ளது.

நிறுவனத்தின் புதிய தயாரிப்பு உத்தி மாற்றங்கள் (Product Strategy Changes) காரணமாக ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகாது என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அதற்கு மாறாக இந்த போனை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஒன்பிளஸ் நிர்வாகம் உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், இதன் இந்திய விலை விவரங்கள் கசிந்துள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

24
ஸ்னாப்டிராகன் 8 எலைட் போன்கள்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒன்பிளஸ் இந்தியா நிர்வாகிகள் பங்கேற்ற 'ரகசியக் கூட்டம்' (Closed-Door Meeting) ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் 16 போனை அறிமுகம் செய்வது குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஒன்பிளஸ் 16 இந்தியாவில் வெளியாகாது என்றும், அதற்குப் பதிலாக 2026-2027 காலகட்டத்தில் 'ஒன்பிளஸ் 16R' (OnePlus 16R) மாடலே நிறுவனத்தின் முன்னணி போனாக இந்தியாவில் களமிறக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகின. இருப்பினும், தனது புதிய உத்தி குறித்தோ அல்லது ஒன்பிளஸ் 16 இந்திய அறிமுகம் குறித்தோ ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை.

34
அதிர்ச்சி அளிக்கும் இந்திய விலை

Smartprix வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள் கசிந்துள்ளன.

எதிர்பார்க்கப்படும் விலை - ரூ. 1,30,000 முதல் ரூ. 1,40,000 வரை.

விலை உயர்வு - இது உண்மையாகும் பட்சத்தில், முந்தைய மாடலான ஒன்பிளஸ் 15-ஐ விட இது மிக அதிக அளவிலான விலை உயர்வாகும். (இந்தியாவில் ஒன்பிளஸ் 15 காரின் 12GB + 256GB வேரியண்ட் ரூ. 84,999 ஆகவும், 16GB + 512GB வேரியண்ட் ரூ. 93,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது). சீனாவில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அக். 12 அன்று CNY 5,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 86,000) ஆரம்ப விலையில் அறிமுகமானது. இந்தியாவில் கசிந்துள்ள விலையானது சீன விலையை விட கணிசமாக அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

44
ஒன்பிளஸ் 16: முக்கிய அம்சங்கள் (Specifications)

புரொசஸர் - 2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 (Snapdragon 8 Elite Extreme Gen 6) சிப்செட்.

டிஸ்பிளே - 185Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rate) கொண்ட 6.78 அங்குல Full-HD+ (1,272 x 2,772 பிக்சல்கள்) AMOLED திரை.

பேட்டரி - 9,000mAh பிரமாண்ட பேட்டரி.

சார்ஜிங் - 100W ஒயர்டு (Wired) மற்றும் 50W வயர்லெஸ் (Wireless) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி.

Read more Photos on
click me!

Recommended Stories