Neymar Net Worth: கால்பந்து திறமையால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நெய்மர், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் ஆடம்பர சொத்துகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பேரரசை உருவாக்கியுள்ளார்.
பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர், தனது திறமையான ஆட்டத்தால் மட்டுமல்ல, உலகளாவிய பிராண்ட் மதிப்பாலும் கவனத்தை ஈர்த்தவர். களத்தில் கோல்கள் அடித்து ரசிகர்களின் மனதை வென்ற அவர், களத்திற்கு வெளியே தனது வாழ்க்கை முறையாலும் அடிக்கடி தலைப்புச் செய்தியாக மாறுகிறார்.
25
ஆயிரக்கணக்கான கோடிகளை எட்டிய சொத்து மதிப்பு
பல்வேறு சர்வதேச அறிக்கைகளின்படி, 2026-ம் ஆண்டு நெய்மரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 450 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ.3,700 கோடிக்கும் அதிகம். கிளப் ஒப்பந்தங்கள், போட்டி போனஸ் மற்றும் விளம்பர வருமானம் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
35
விளம்பர உலகின் நட்சத்திரம்
கால்பந்தில் மட்டுமல்ல, வணிக உலகிலும் நெய்மர் ஒரு வலுவான பெயராக உருவெடுத்துள்ளார். உலகளாவிய பல பிராண்டுகளுடன் அவர் இணைந்து வருகிறார். சமூக வலைதளங்களில் உள்ள அவரது பெரும் ரசிகர் பட்டாளம், நிறுவனங்களுக்கு முக்கிய சந்தைப்படுத்தல் பலமாக அமைகிறது.
நெய்மரின் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பது அவரது வாகன சேகரிப்புதான். அரிய வகை சூப்பர் கார்கள், தனியார் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர்கள் அவரது சொத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் அவரது ஆடம்பர வாழ்க்கையின் அடையாளங்களாக பார்க்கப்படுகின்றன.
55
வெற்றியின் மற்றொரு முகம்
400-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள நெய்மர், கால்பந்து உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது செல்வமும், பிரபலமும், விளையாட்டு திறமையும் இணைந்து, அவரை ஒரு உலகளாவிய ஐகானாக மாற்றியுள்ளனர்.