மீண்டும் மணப்பெண்ணாக மாறிய ஶ்ரீதிகா! செக்கச் சிவந்த சேலையில் ஆர்யனுடன் ப்ரீ வெட்டிங் போட்டோஸ்!

First Published | Jul 20, 2024, 8:35 PM IST

பிரபல தமிழ் சீரியல் நட்சத்திரங்கள் ஸ்ரீதிகா மற்றும் ஆர்யன் இருவரும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில், திருமணத்துக்கு முன் ஜோடியாக போட்டோசூட் நடத்தியுள்ளனர்.

Srithika, SSR Aaryann

பிரபல தமிழ் சீரியல் நடிகை ஸ்ரீதிகா கடந்த 2019ஆம் ஆண்டு சனீஷை திருமணம் செய்து பிரிந்தவர். தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளார். அவருக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க உள்ளது.

Srithika, SSR Aaryann

'வெண்ணிலா கபடி குழு', 'வேங்கை' போன்ற படங்களில் நடித்துள்ள இவர், தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனும், 'மகராசி' படத்தில் துணை நடிகருமான எஸ்.எஸ்.ஆர்.ஆர்யனைக் காதலிப்பதாகத் அறிவித்தார்.

Tap to resize

Srithika, SSR Aaryann

எஸ்.எஸ்.ஆர் ஆர்யன் முதலில் 'வாணி ராணி', 'கல்யாண பரிசு', 'திருமகள்' போன்ற சீரியல்களில் நடித்த நடிகை நிவேதிதா பங்கஜை திருமணம் செய்திருந்தார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

Srithika, SSR Aaryann

இந்நிலையில், ஸ்ரீதிகா மற்றும் ஆர்யன் இருவரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தங்கள் காதல் பற்றித் தெரிவித்திருந்தனர்.  விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் கூறியிருந்தனர். "நாங்கள் எடுத்த இந்த முடிவுக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் எப்போதும் போல வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

Srithika, SSR Aaryann

ஆனால், ஶ்ரீதிகாவின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் அவரது முதல் கணவரின் பெயர் இன்னும் உள்ளது. இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தனது இன்ஸ்டாகிராம் ஐடியை இன்னும் மாற்ற முடியவில்லை என்றும், அது விரைவில் சரிசெய்யப்படும் என்றும் ஸ்ரீதிகா தெளிவுபடுத்தியுள்ளார்.

Srithika, SSR Aaryann

விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில், ஸ்ரீதிகா மற்றும் ஆர்யன் இருவரும் திருமணத்துக்கு முன் ஜோடியாக எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Videos

click me!