முன்னாள் முதல்வரைக் கைப்பிடித்து ஆடம்பரமாக வாழும் நடிகை! சொத்து மதிப்பைக் கேட்டா தலைசுத்தும்!

Published : Feb 25, 2024, 12:21 PM ISTUpdated : Feb 25, 2024, 12:35 PM IST

ராதிகா அவரை விட 27 வயது மூத்தவரான முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இப்போது அவரது சொத்து மதிப்பு 100 கோடிக்கு மேல்!

PREV
18
முன்னாள் முதல்வரைக் கைப்பிடித்து ஆடம்பரமாக வாழும் நடிகை! சொத்து மதிப்பைக் கேட்டா தலைசுத்தும்!
Radhika Kumaraswamy

திரையுலகில் பல உண்மையான காதல் கதைகள் உள்ளன. அவை ரசிகர்களின் கவனத்துக்கு வரும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 18 ஆண்டுகளுக்கு முன், ராதிகா - குமாரசாமி இடையேயான காதல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

28
Radhika Kumaraswamy

கன்னட சினிமா தயாரிப்பாளராக மாறியிருந்த ராதிகா கடந்த 2006ஆம் ஆண்டு, ஜேடிஎஸ் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமியைத் திருமணம் செய்துகொண்டார். இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பிரகாசமாக்கியது. ஆனால் திரையுலக வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது.

38
Radhika Kumaraswamy

ராதிகா தனது ஒன்பதாம் வகுப்பை முடித்தபோது கன்னட திரைப்படமான 'நீலா மேக ஷாமா' (2002) மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். விஜய் ராகவேந்திராவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சிவராஜ்குமார் நடித்த 'தவரிகே பா டாங்கி' படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது. ஆனாலும் ராதிகாவின் சினிமா வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை.

48
Radhika Kumaraswamy

ராதிகா 30 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், நடிகையாக அவரது பயணம் நின்று போனது. அவர் படங்களில் நடிக்காவிட்டாலும் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 2012ஆம் ஆண்டு யாஷ் நடித்த 'லக்கி' என்ற கன்னடப் படத்தைத் தயாரித்தார்.

58
Radhika Kumaraswamy

ராதிகாவின் நிஜ வாழ்க்கை காதல் கதை வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு கர்நாடக முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமியை திருமணம் செய்த ரகசியம் வெளியானது. 2006ஆம் ஆண்டிலேயே ஜேடிஎஸ் தலைவர் எச்டி குமாரசாமியை திருமணம் செய்து கொண்டதாக ராதிகா வெளிப்படுத்தினார். இவர்கள் இருவருக்கும் ஷமிகா என்ற மகளும் உள்ளார்.

68

திருமணத்தின்போது குமாரசாமிக்கு 47 வயது. ராதிகா அவரை விட 27 வயது இளையவர். இது குமாரசாமியின் இரண்டாவது திருமணம். அவரது முதல் திருமணம் 1986ஆம் ஆண்டு நடந்தது. ராதிகாவுக்கும் இது இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது. அவர் 2000ஆம் ஆண்டில் ரத்தன் குமார் என்ற நபரை மணந்தார் எனவும் அந்தத் திருமண உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்றும் தெரிகிறது.

78
Radhika Kumaraswamy

எச்.டி.குமாரசாமிக்குத் தனது மகளைத் திருமணம் செய்து வைப்பதை ராதிகாவின் தந்தை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் ராதிகா குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் நீண்ட நாட்களாக தங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தனர். பின்னர் விஷயம் தெரியவந்தபோது ராதிகாவின் தந்தை மிகவும் அதிர்ச்சியடைந்தார்.

88
Radhika Kumaraswamy

ராதிகா ஒரு நடிகையாக திரையுலகில் தோல்வி அடைந்தவர்தான். ஆனால் அவரது பெயர் வணிக உலகில் மிகவும் பிரபலமானது. கர்நாடக முதல்வரை மணந்த பிறகு பல கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரரானார். ராதிகாவின் சொத்து மதிப்பு ரூ.124 கோடி என்றும், அவரது கணவர் ஹெச்.டி. குமாரசாமிக்கு ரூ.181 கோடி சொத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!

Recommended Stories