பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தனலட்சுமி. மக்கள் பிரதிநிதியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த இவர், பிரபலமான அதே அளவுக்கு அதிக விமர்சனங்களையும் சந்தித்தார். அதற்கு முன் டிவி சீரியல், சினிமா எதிலும் நடித்து அறிமுகமானவராக இல்லை என்றாலும் டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி அவர் கூறிய தகவல்கள் மூலம் விமர்சனங்களை வாங்கிக் கட்டிக்கொண்டார். அப்பா ஒர்க் ஷாப் நடத்துகிறார் என்றும் அம்மா துணி வியாபாரம் செய்கிறார் என்றும் சொன்ன தனலட்சுமி ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில் தனலட்சுமியின் பேச்சைக் கேட்ட அவருடைய நண்பர்கள் பலர் தனலட்சுமி சொல்வது எல்லாமே பொய் என்று போட்டு உடைத்தனர். அது மட்டுமின்றி தனக்கு மேக்அப் கூட போடத் தெரியாது என்று அளந்துவிட்டார். உடனே அவருடைய போட்டோ ஷூட் படங்களைப் பகிர்ந்து இதுவும் பொய்தான் என்று நெட்டிசன்கள் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இதனால், தனலட்சுமி பொய்யாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார் என்று சர்ச்சை எதிர்மறையான பிம்பம் உருவானது. அப்போது அவருக்கு ஆதரவாக அவருடைய அம்மா பல பேட்டிகள் கொடுத்து ஆதரவாக பேசி வந்தார். பின்னர் தனலட்சுமிக்கும் அவருடைய அம்மாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
பிக்பாஸ் வீட்டுக்குள் 77 நாட்கள் இருந்த தனலட்சுமி, சக போட்டியாளரான அசீமை விமர்சித்துப் பேசினார். பிறகு அசீம் வின்னர் ஆனதும் அசீம் அண்ணா என்று கூறிக்கொண்டு அவருடன் சேர்ந்துகொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் தனலட்சுமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 10 லட்சம் ரூபாய் செலவு பண்ணி பிக் பாஸ் உள்ளே வந்தேன் என்றும் கூறியிருக்கிறார். 12 வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன் என்றும் பிக்பாஸ் வீட்டுக்குள் போனதும் தன்னுடைய படிப்பே போய்விட்டது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் உடன் இருந்தவர்களை மிஸ் பண்ணி அழுததாகவும் சொல்லி இருக்கிறார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால்தான் உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்காமல் இருக்கு என்று சிலர் சொல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் பட வாய்ப்புகளுக்கு முயற்சி செய்துவரும் தனலட்சுமி, இப்போது 'நாயகி' என்ற ஆன்லைன் ஷோவில் நடிப்பதாகவும் கூறுகிறார். 'நாயகி' தான் நினைத்தபடி வரும் என்றும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் சொல்கிறார்.bb Dhanalakshmi