என் வாழ்க்கையிலே முதல் தடவை இதை பண்ணுனேன்! விஜய் சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சியில் வெங்கட் பிரபு!

First Published | Sep 2, 2024, 4:42 PM IST

தளபதி விஜய் தன்னுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, 'GOAT' படத்திற்காக செய்த செயலை இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
 

GOAT Movie

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'கோட்' திரைப்படம், செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படம் குறித்த பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தன்னுடைய வாழ்க்கையிலேயே முதல்முறையாக தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விஜய், இப்படி செய்ததாக கூறினார் என  வெங்கட் பிரபு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார்.

GOAT Release date

தளபதி விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே, அன்றைய தினம் தளபதியின் ரசிகர்களுக்கு தீபாவளி தான். தளபதி விஜய்யின் படங்களுக்கு, தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மற்றும் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் வரவேற்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அபிஷேக் பச்சனுக்கு முன்பே.. ஐஸ்வர்யா ராய்க்கு ரகசிய திருமணம் நடந்ததா; யாருடன் தெரியுமா?

Tap to resize

Goat Movie Budget:

லியோ படத்தின் வெற்றிக்குப் பின்னர், தளபதி விஜய் தற்போது நடித்து முடித்துள்ள கோட் படத்திற்கும் இதே அளவிலான எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளது. மேலும் இந்த படத்தில், விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளது மட்டுமின்றி... விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், லைலா, சினேகா, பிரேம் ஜி அமரன், போன்ற ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Goat movie Trailer

இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்தில் இருந்து வெளியாகி உள்ள நான்கு சிங்கிள் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது போலவே.. இப்படத்தின் ட்ரெய்லரும் அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் வெளியானது.

ரக்கட் லுக்கில்... BMW பைக்கில் அமர்ந்து மிரட்டலாக போஸ் கொடுக்கும் ரட்சிதா மகாலட்சுமி!

Goat Promotion

ஒருபுறம் கோட்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் இப்படத்தின் டிக்கெட்டுக்கான முன் பதிவும் வேகமாக நடந்து வருகிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளது மட்டும் இன்றி, கேப்டன் விஜயகாந்தின் தோற்றமும் AI தொழில்நுட்பம் மூலம் 'GOAT' படத்தில் இடம்பெற உள்ளது.

Vijay Clean Shave

இந்நிலையில் தளபதி விஜய், தன்னுடைய வாழ்க்கையிலேயே முதல்முறையாக 'கோட்' படத்திற்காக அதுவும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதற்காக ஒரு விஷயத்தை செய்ததாக கூறி நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார் வெங்கட் பிரபு. விஜய்யின் சிறு வயது தோற்றத்திற்காக அவருடைய முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும் என கூறி கிளீன் சேவ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை தளபதியிடம் வெங்கட் பிரபு தயங்கிபடியே கூற, விஜய் கிளீன் ஷேவ் செய்த பின்னர், "என் வாழ்க்கையிலே முதல் தடவை உனக்காக தான் கிளீன் ஷேவ் பண்ணி இருக்கேன் என வெங்கட் பிரபுவை பார்த்து விஜய் கூறியதாக தெரிவித்துள்ளார்.

கட்டாயப்படுத்தி என்னையும் என் தங்கையையும் உதட்டில் முத்தமிட டார்ச்சர் செய்தனர்! ராதிகா கூறிய அதிர்ச்சி தகவல்!

Latest Videos

click me!