கடலூர் பாதிரிக்குப்பத்தில், தனது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரசாத் என்பவரை கவிப்பிரியா என்ற பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிக்க கவிப்பிரியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பிரசாத் (40). திருமணமாகாதவர். வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இவர் தற்போது அதே ஊரில் சுந்தரமூர்த்தி நகரில் பிரசாத் தனது தாய் ராமதிலகம் (70) ஆகிய இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனி அறையில் இருந்த பிரசாத், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அலறியபடி ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை கண்ட தாய் அழுது கூச்சலிட்டுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் பிரசாத் உயிரிழந்து கிடந்தார்.
24
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
34
பாலியல் ரீதியாக தொல்லை
இதனிடையே திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் பக்கத்தில் வாடகை வீட்டில் வசித்த கவிப்பிரியா (30) என்பவர் சரணடைந்தார். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கவிப்பிரியா திருப்பாதிரிப்புலியூர் அகில் நாயுடு தெருவில் வசித்து வருகிறார். இவர் பிரசாத் வீட்டின் அருகே வாடகைக்கு குடியிருக்கும் தனது தந்தை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில், பிரசாத் கவிப்பிரியாவின் தங்கைக்கு கடந்த மூன்று நாட்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கவிப்பிரியாவிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிப்பிரியா பிரசாத் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. கவிப்பிரியாவின் கணவர் முத்து (35) தலைமறைவாகி இருப்பதால் இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர்.