காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!

Published : Dec 11, 2025, 10:53 AM IST

பெங்களூருவில் விமானப் பயிற்சி படித்து வந்த சித்ரப் பிரியா என்ற மாணவி கேரளாவில் காணாமல் போனார். பின்னர் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், குடிபோதையில் தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததாக அவரது காதலன் கைது.

PREV
14

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மலையாற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜு. வனத்துறையில் தற்காலிக தீயணைப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷைனி. இவரது மகள் சித்ரப் பிரியா (19). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சி துறை படிப்பு படித்து வந்தார். விடுமுறை கிடைக்கும் போது அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றுள்ளார். அதேபோல் கடந்த 6ம் தேதி ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலை வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்ற சித்ரப் பிரியா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

24

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும், அவரது தோழிகளிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் காலடி காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சித்ரப் பிரியாவை தீவிரமாக தேடி வந்தனர்.

34

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சித்ரப் பிரியா வாலிபர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது. இதன் விசாரணையை தீவிரப்படுத்தியதில் சித்ரப் பிரியாவை அழைத்து சென்ற வாலிபர் அவரது காதலன் ஆலன் (21) என்பது தெரியவந்தது. சித்ரப் பிரியா காணாமல் போவதற்கு முன்பு இருவரும் தொலைபேசியில் பலமுறை பேசியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

44

அப்போது, இருசக்கர வாகனத்தில் சித்ரப் பிரியாவை அழைத்து சென்றது உண்மை தான். ஆனால் அவரை வீட்டில் கொண்டு விட்டதாகவும் அலன் கூறினார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் அனுப்பி வைத்தார். இதனிடையே அவரது வீட்டில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சித்ரப் பிரியாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் மீண்டும் காதலன் அலனிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தான் குடிபோதையில் சித்ரப் பிரியாவை தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து காதலன் அலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories