காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்

Published : Dec 10, 2025, 11:32 AM IST

கோவையில் மது போதையில் சொகுசு காரில் வந்த நபர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கீழே இறக்கிவிட்டு காரை பறிமுதல் செய்தனர். திமுக கட்சி கொடி இருந்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் அனுப்பி வைத்ததாக சமூக ஆர்வலர்கள் கேள்வி.

PREV
14
கோவையில் வாகன சோதனை

கோவையில் அதிகரிக்கும் போதைப் பொருளை தடுக்கும் விதமாக காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் போதையால் விபத்துகள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மேலும் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போதைப் பொருள்களுக்கு அடிமையாக அதை தடுக்கும் விதமாகவும் மாநகர் முழுவதும் ரோந்து பணி மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

24
மது போதையில் கார் ஓட்டிய நபர்கள்

இந்நிலையில் காந்திபுரம், அடையார் ஆனந்த பவன் பின்புறம் உள்ள என்.ஜி.என் வீதியில் இரவு வந்த சொகுசு காரில் இருந்த நபர்கள் மது போதையில் இருந்துள்ளனர். அவர்களை மறித்த காவல் துறையினர் காரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறி அவர்களே கீழே இறக்கி உள்ளனர். மேலும் அவர்களிடம் நீங்க இந்த நிலைமையில போயி யாரையாவது முட்டி சாக வைக்கிறதுக்கா ? என்று கேள்வி எழுப்பிய அவர்கள் ஆட்டோவில் செல்ல கூறி உள்ளனர்.

34
செல்போனில் வீடியோ பதிவு

காரில் இருந்து இறங்கும் போது காருக்குள் மது பாட்டில்களும் இருந்தன. காரை முழுவதும் சோதனையிட கூறிய உதவி ஆய்வாளர், பிறகு வரும் அவர்கள் பணத்தைக் காணவில்லை என கூறுவார்கள் என்பதால் வீடியோ எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளனர் அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

44
திமுக கட்சி கொடி

மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் கேட்கும் போது அவர்களின் நேற்று இரவு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தனர். சாதாரண நபர்கள் இதுபோன்று மது போதையில் வாகனங்கள் ஓட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கும் காவல்துறையினர் இவர்கள் திமுக கட்சி கொடியுடன், கட்சி பிரமுகர்களாக இருப்பதால் வழக்கு பதிவு செய்யவில்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories