இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி

Published : Dec 09, 2025, 03:38 PM IST

ஓசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி தனது கள்ளக்காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த கணவரை, மனைவி கதவைத் திறந்துவிட, உள்ளே நுழைந்த கும்பல் கத்தியால் குத்திக் கொன்றது அம்பலம்

PREV
15
காதலித்து திருமணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சரவணன் (25). இவரது மனைவி முத்துலட்சுமி (21). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன் முத்துலட்சுமி 10ம் வகுப்பு படிக்கும் போதே பார்வதி நகரை சேர்ந்த சூர்யா (23) என்பவரை காதலித்துள்ளார். பின்னர் அவரை பிரிந்து சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

25
கள்ளக்காதலனுடன் நெருக்கம்

ஆனால், சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் பழைய காதலன் சூர்யாவை மறக்க முடியாமல், திருமணத்திற்கு பின்பும் அவருடன் தொடர்பில் இருந்தார். அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் சரவணனுக்கு தெரிய வந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார்.

35
கணவன் மனைவி இடையே தகராறு

ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மதுபோதையில் இருந்த சரவணன் முத்துலட்சுமியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி இதுபற்றி கள்ளக்காதலன் சூர்யாவிடம் கூறியது மட்டுமல்லாமல் சரவணனை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

45
கணவர் கொலை

நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் சரவணன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12:30 மணிக்கு முத்துலட்சுமியிடம் சூர்யா வீட்டின் கதவை அதிகாலையில் திறந்து வைக்குமாறு கூறியுள்ளார். முத்துலட்சுமியும் நேற்று அதிகாலை வீட்டு கதவை திறந்து வைத்துள்ளார். அப்போது சூர்யா, நண்பர்களான சக்தி (23), சந்தோஷ் (23) ஆகியோருடன் அங்கு வந்தார். அப்போது முத்துலட்சுமி, தனது மாமியார் தூங்கிய அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டினார். பின்னர் அவர்கள் தூங்கி கொண்டிருந்த சரவணனை கத்தியால் குத்தி கொன்று விட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாய் மங்கம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

55
மனைவி அதிர்ச்சி தகவல்

அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தது அம்பலமானது. இந்நிலையில் ஓசூரிலிருந்து தப்பி செல்ல முயன்ற முத்துலட்சுமி, அவரது கள்ளக்காதலன் சூர்யா, கொலைக்கு உதவிய சந்தோஷ், சக்தி ஆகிய 4 பேரையு போலீசார் நேற்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories