35 வயது மானசியை பார்த்ததும் மனசை பறிக்கொடுத்த மந்திரவாதி! அப்புறம் ஒரே குஜால் தான்! இறுதியில் நடந்த அதிர்ச்சி

Published : Oct 18, 2025, 01:00 PM IST

தெலுங்கானாவில், மந்திரவாதி ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்த மானசி என்ற பெண், தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் ராமுலுவை காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் அதனை விபத்து போல சித்தரிக்க முயன்றனர். 

PREV
14
திருடி போன நகை

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் ஸ்ரீபுரத்தை சேர்ந்தவர் ராமுலு (35). பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மானசி ( 35). இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராமுலு வீட்டில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. இதனையடுத்து நகையை திருடியவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க மந்திரவாதி சுரேஷ் (27) என்பவரிடம் கணவன், மனைவி இருவரும் சென்றுள்ளனர்.

24
மந்திரவாதியுடன் கள்ளக்காதல்

அப்போது மந்திரவாதி சுரேஷ் பூஜைகள் செய்தபோது மானசாவுக்கும் அவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களது விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

34
கணவன் கொலை

இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கள்ளக்காதலனை பார்க்காமல் பேசாமல் மானசியால் இருக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் கணவரை போட்டுத்தள்ள சுரேஷிடம் மானசா தெரிவித்தார். அதன்படி கடந்த 8-ம் தேதி மானசா உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தனது தாய் வீட்டில் உள்ளதால் கணவனை கொலை செய்தால் யாருக்கும் சந்தேகம் வராது என சுரேஷிடம் தெரிவித்தார். அதன்படி சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ராமுலுவுக்கு போன் செய்து வரவழைத்து அவருக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார். போதை தலைக்கேறிய ராமுலுவின் வாய், மூக்கில் ஸ்டிக்கர் ஒட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் விபத்தில் உயிரிழந்தது போல சாலையில் வீசி சென்றனர்.

44
மனைவி கள்ளக்காதலன் கைது

அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமுலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் அவரது மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது கள்ளக்காதலனுடன் ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ், மானசா, பாலபீர் மற்றும் ஹனுமந்து ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories