நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை அலுவலம் உள்ளிட்ட இடங்களில் பெண்களின் மீதான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்ட போதிலும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கேரளாவில் பேராசிரியை ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (28). இவரது நண்பர் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த மார்டின் ஆண்டனி (27). இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரி பேராசிரியை அறிமுகமாகியுள்ளார். அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர்.