என்ன லவ் பண்ண மாட்டியா! எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

Published : Oct 17, 2025, 02:51 PM IST

கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த யாமினி பிரியா என்ற மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்த விக்னேஷ் என்ற இளைஞர், காதலை ஏற்க மறுத்ததால் மிளகாய் பொடி தூவி, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

PREV
14
தனியார் கல்லூரி மாணவி

பெங்களூரு ஸ்ரீராமபுரம் அடுத்துள்ள சுதந்திர பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கோபால். இவருடைய சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமத்தை சேர்ந்தவர். இவரது மகள் யாமினி பிரியா(20). இவர் பனசங்கரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல காலையில் யாமினி கல்லூரிக்கு சென்றுள்ளார். பின்னர் தேர்வு முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

24
ஒருதலை காதலால் கொலை

இந்நிலையில், மதியம் சுமார் 2 மணியளவில் மந்திரி வணிக வளாகத்தின் பின்புறமுள்ள ரயில்வே மேம்பாலம் அருகே யாமினி வந்து கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் வழிமறித்தது மட்டுமல்லாமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் எதிர்பாராத விதமாக யாமினி கண்ணில் மிளகாய் பொடியை தூவி கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். அலறியடி ரத்த வெள்ளத்தில் சரிந்த யாமினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்தார்.

34
போலீஸ் விசாரணை

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவி யாமினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

44
தலைமறைவான விக்னேஷ்

யாமினியை விக்னேஷ் என்ற இளைஞர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததும், போகும் இடமெல்லாம் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருமுறை யாமினியின் கழுத்தில் விக்னேஷ் வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது. தன் காதலனை ஏற்க மறுத்ததால் விக்னேஷ் யாமினியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள விக்னேஷை தேடி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories