ஆஃப் பாட்டில் அடிச்சிட்டு இவரு போட்ட ஆட்டம் இருக்கே.. ரஜினியின் பேச்சை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த முதல்வர்

Published : Sep 13, 2025, 11:16 PM IST

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனக்கும், இளையராஜாவுக்கும் இடையேயான சுவாரசிய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

PREV
14
இளையராஜாவுக்கு பாராட்டு விழா

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் இளையராஜா, முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் இளையராஜாவின் ஹிட் பாடல்கள் தொகுப்பு பாடப்பட்டது.

24
ரகசியம் உடைத்த ரஜினி

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறுகையில், விழா நடைபெறுவதற்கு முன்னாள் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் நாம் செய்த அனைத்தையும் சொல்லப்போகிறேன் என்று சொன்னார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாம் செய்ததை நானே சொல்லட்டுமா என இளையராஜா கேட்ட உடனடியாக ரஜினிகாந்த் தனது இருக்கையில் இருந்து வேகவேகமாக எழுந்து வந்தார்.

34
ஆஃப் பாட்டிலை குடிச்சிட்டு அலப்பறை செய்த இளையராஜா

பின்னர் ரஜினிகாந்த் பேசுகையில், “விஜிபி ஸ்டூடியோவில், ஜானி படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. பணிகளை முடித்துக் கொண்டு இரவு நேரத்தில் நானும், மகேந்திரன் சாரும் மது அருந்திக் கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த இளையராஜாவிடம் வேண்டுமா என கேட்டதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். அன்றைய தினம் வெறும் அரைபாட்டில் பியரைக் குடித்துவிட்டு இவர் செய்த அலப்பறை இருக்கே.. 3 மணி வரை தூங்க விடவில்லை.

44
அரங்கம் அதிர்ந்த சிரிப்பலை

சினிமாவில் உள்ள கிசுகிசு பற்றி பேசத் தொங்கிவிட்டாார். குறிப்பாக சினிமா நடிகைகள் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார். அண்ணன் பெரிய லவ். அதனால தான் இந்த பாட்டெல்லாம்.. என்று சொன்னதும் அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது. ஆனால் அரசு நிகழ்ச்சியில் மது குடித்ததை பெருமையாகப் பேசுகிறார்களே இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று தெரியாமல் முதல்வர் சற்று அசௌகரியத்துடன் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories