பார்த்ததுமே பத்திக்கிச்சு! 11ம் வகுப்பு மாணவனுடன் 27 வயது இளம்பெண் லாட்ஜில் ரூம்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

Published : Sep 03, 2025, 01:01 PM IST

கேரளாவைச் சேர்ந்த 27 வயது சனுஷா, 17 வயது சிறுவனுடன் மாயமானார். கர்நாடக மாநிலத்தில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு, சனுஷா கைது செய்யப்பட்டார்.

PREV
14

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை அடுத்துள்ள சேர்த்தலா பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சனுஷா (27). கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அருகில் உள்ள குத்தியதோடு பகுதியை சேர்ந்த தூரத்து சொந்தமான 11ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.

24

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் திடீரென மாயமானார்கள். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேபோல் இளம்பெண்ணின் பெற்றோரும் சேர்த்தலா போலீசிலும் புகார் செய்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருப்பிடத்தை போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் இருவரும் செல்போனை பயன்படுத்தவில்லை. இதனால் இவர்களை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அப்படி இருந்த போதிலும் விடாமல் போலீசார் தேடி வந்தனர்.

34

அப்போது இளம்பெண் சனுஷா தனது உறவினர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி இருக்கிறார். அதனை வைத்து இளம்பெண்ணின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். இருவரும் கர்நாடக மாநிலம் கொல்லூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கொல்லூர் விரைந்தனர். அங்கு லாட்ஜில் ரூம் போட்டு தங்கி இருந்த இளம்பெண் மற்றும் மாணவரை பிடித்தனர். பின்னர் இருவரையும் சேர்த்தலாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

44

விசாரணைக்குப் பின் போலீசார் சனுஷாவை கைது செய்து சேர்த்தலா முதல் வகுப்பு குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சனுஷாவை போலீசார் கொட்டாரக்கரை மகளிர் சிறையில் அடைத்தனர். மாணவனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 17 வயது பள்ளி மாணவனுடன் 27 வயது இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories