ஜன்னல் வழியாக பார்க்க கூடாததை பார்த்த கணவர்! தாலி கட்டிய புருஷனின் கதையை முடித்த டீச்சரின் நிலைமையை பார்த்தீங்களா!

Published : Aug 25, 2025, 02:09 PM IST

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ஆசிரியை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

PREV
15

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சொரப் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ். ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கலபுரகியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த லட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

25

இதனையடுத்து இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் இம்தியாஸ், தனது மனைவி லட்சுமி மற்றும் மகனுடன் பத்ராவதி டவுன் ஜன்னாபுரா என்.டி.பி. அலுவலகம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஆசிரியை லட்சுமி தனது வீட்டின் அருகே தன்னுடைய பள்ளிக்கூட தோழன் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியை வீட்டுக்கு வரைழத்து லட்சுமி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

35

இதனை லட்சுமியின் மகன் பார்த்து அதிர்ச்சி அடைந்து தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து இம்தியாஸ், தனது மனைவி லட்சுமியை கண்டித்துள்ளார். ஆனாலும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை யொட்டி இம்தியாஸ் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து தன்னுடைய வீட்டுக்கு சென்று மனைவியையும் அழைத்து வருவதாக கூறிவிட்டு வந்தார். அவர் மீட்டுக்கு வந்து பார்த்த போது லட்சுமியும், கிருஷ்ணமூர்த்தியும் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

45

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி, தனது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டு இம்தியாசை கொலை செய்ய வீட்டுக்கு வரும் படி கூறியுள்ளார். அதன்பேரில் கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பர் சிவராஜ் என்பவருடன் லட்சுமியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் லட்சுமி, அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய நண்பர் சிவராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து இம்தியாசை கொலை செய்து அவரது உடலை ஆட்டோவில் கொண்டு சென்று பத்ரா கால்வாயில் வீசினர்.

55

இந்த கொலை சம்பவம் தொடர்பாக லட்சுமி, அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய நண்பர் சிவராஜ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் லட்சுமிக்கும், அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்திக்கும் மரண தண்டனையும், அவரது நண்பர் சிவராஜுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து 3 பேரும் சிவமொக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read more Photos on
click me!

Recommended Stories