தனது தாயை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக டெல்லி போலீசார் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர். தனது மகன் தனது புர்காவை கழற்றுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், அவன் தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்து அடித்தார். வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்’’ என பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய டெல்லியின், ஹவுஸ் காசி பகுதியில் உள்ள அந்த இளைஞர், புனித யாத்திரை முடிந்து சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய தனது தாயை 'நடத்தையற்றவர்' என்று குற்றம் சாட்டி , பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, தனது 25 வயது மகளுடன் ஹவுஸ் காசி காவல் நிலையத்திற்கு வந்து தனது மகன் இந்த மாதம் பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்தார்’’ எனக் கூறினர்.