திருப்பூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சண்முகவேல், மடத்துக்குளம் MLA மகேந்திரனின் தோட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், எம்எல்ஏ.விடம் விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் சண்முகவேல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனின் தோட்டத்தில் தந்தை, மகன் இடையே சண்டை நடப்பதாகக் கிடைத்த தகவலின் பெயரில் அப்பகுதிக்கு காவல் ஆய்வாளர் சென்றுள்ளார்.
24
SI படுகொலை
தந்தை, மகன் இடையேயான மோதலை SI தடுத்து நிறுத்திய நிலையில், மீண்டும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது SI சண்முகவேல் மீது அரிவால் உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகவேல் உடன் காவலர் அழகு ராஜா சென்றிருந்த நிலையில், அவர் விசாரணையின் போது வாகனத்திலேயே இருந்ததால் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
34
ரூ.1 கோடி நிவாரணம்
கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள முதல் கட்டமாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காவலரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொலை நடைபெற்றது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனின் தோட்டம் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த காவல துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் காவல் துறையினருக்கு முதலில் தகவல் தெரிவித்ததும் அவர் தான் என்று சொல்லப்படுகிறது. மேலும் சம்பவம் நடைபெற்று சுமார் 8 மணி நேரம் கழித்தே எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.