Digital Arrest | இப்படிலாம் ஏமாற்ற படலாம்..! மக்களே உஷார்!

First Published | Aug 16, 2024, 4:52 PM IST

எவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் ஏமாற்றுக்காரர்ரகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இருந்த இடத்திலேயை உங்கள் கடந்து செல்லவிடாமல் தடுத்து வழிப்பறி செய்வது தான் டிஜிட்டல் அரெஸ்ட். இதுகுறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
 

Digital Arrest

தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வத்திற்கு மட்டுமே பயன்படுத் வேண்டும், அழிக்க அல்ல என மேடைபோட்டு பேசினாலும், தொழில்நுட்பத்தால் நாளுக்குநாள் மோசடிகளும், பித்தலாட்டங்களும் அரங்கேறி வருகிறது. மோசடிக்காரர்கள் உங்கள் தனிப்பட்ட விஷசங்களை அறிந்துகொண்டு அதன்வாயிலாக உங்கள் அதீத உணர்ச்சிவசப்பட்டு ஏமாற்றி விடுகிறார்கள். அப்படிப்பட்ட சில SCAM தற்போது பரவி வருகிறது.

இந்த ஸ்கேம் குறித்த பலருக்கும் தெரிந்திருந்தாலம், ஏதோ ஒரு இடத்தில் பீதியடைந்து அந்த ஸ்கேமில் சிக்கி பணத்தை இழந்து விடுகிறார்கள். அப்படி ஒரு ஸ்கேம் தான் 'டிஜிட்டல் அரெஸ்ட்'
 

Digital Arrest

டிஜிட்டல் அரெஸ்ட்

Digital Arrest - உங்களை ஒரு இடத்தில் அப்படியே அமரச்செய்வது. ஒரு பீதியில் அல்லது பயத்தில் நீங்களும் அதற்கு உடன்பட்டு அவர்கள் சொல்வதை கேட்டகவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவீர்கள். இறுதியில் மட்டுமே தாங்கள் பணத்தை இழந்ததை உணர்வீர்கள்.

எதிர்பார்த்த நேரத்தில் வரும் ஸ்பேம் கால்

நீங்கள் ஒரு அழைப்புக்காக காத்திருக்கும் போதோ, ஒரு எச்சரிக்கை அழைப்பு வந்த பின்னர் தொடர்ந்து வரும் அதே மாதிரியான அழைப்புதான் இந்த ஸ்பேம் அழைப்பாகும். உங்களை தொடர்புகொள்ளும் ஒருவர், உங்களது பார்சல் ரிட்டரன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் சில தேச விரோத பொருட் இருப்தாகவும் கூறுவார்.

Tap to resize

Digital Arrest

முதலில் நீங்கள் நம்ப மறுத்தாலும், உங்களது ஆதார் எண் மற்றும் மொபை எண், பெயர் ஆகியவை சரியாக குறிப்பிடப்படுவதால் ஒரு எச்சரிக்கை புகார் அளிக்குமாறு அவரே சிபிஐக்கு கால் கணெக்ட் செய்தாகக்கூறுவார். நாமும் ஆம், இல்லை என யோசிப்பதற்குள் எதிர் முனையில் பேசும் ஒருவர் தான் ஒரு மும்பை காவல் அதிகாரி என்றும், உங்கள் புகார் கோரிக்கையை ஸ்கைப்பில் தெரிவிக்குமார் அதன் தகவலைகளை கொடுப்பார்.
 

Digital Arrest

நாமும் அதன்படி நடக்க, ஒரு கட்டத்தில் அந்த போலி அதிகாரி உங்கள் பார்சலில் போதைப்பொருள், வெடிமருந்துகள் இருப்பதாகவும், உங்கள் வங்கிக்கணக்கில் மோசடி பணப்பறிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி உங்களையே மிரட்ட ஆராம்பிப்பார். நாமும் நம் சுற்றத்தை எண்ணி இப்பிரச்சனையிலிருந்து வெளிவந்தால் போதும் என நினைக்கையில் குறிப்பிட்ட தொகையை அனுப்புமாறு அவர்கள் கேட்பர். நாமும் அந்த பணத்தை அளித்த பின்புதான் நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதே தெரியவரும். இதை அந்த மோசடி குழுவினர் உங்கள் மற்ற செயல்களை சிந்திக்க விடாமல் ஒரு செல்போன் அல்லது லேப்டாப் முன்பு 5 அல்லது 6 மணிநேரம் அமரவைத்து பீதியாக்கி பணம் பறித்து விடுகின்றனர்.
 

Digital Arrest

இதேபோல், ஹெல்த் இன்ஸ்சூரஸ் ஸ்கேம் அழைப்பு, போலி காவல்துறையினரிடம் இருந்து வரும் அழைப்பு என பல வழிமுறைகளில் ஏமாற்றத்தொடங்கியுள்ளனர். எவ்வளவு மெத்தப் படித்த நபர்களாக இருந்தாலும், பெயர், மொபைல் எண், ஆதார் எண், குடும்ப உறுப்பினர்கள் பெயரை வைத்து மோசடி கும்பலிடம் சிக்கும் போது அதிலிருந்து வெளிவருவது சற்று கடினமே.

ஒரே ஒரு பொய்! நடிகை மீனாட்சியை திட்டம் போட்டு தீர்த்து கட்டிய நண்பர்கள்! பதற வைக்கும் Flash Back!
 

Digital Arrest

இருப்பினும், மக்களே இதுபோன் மோசடிகள் தினம் தினம் ஆயிரக்கணக்கில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒருவேளை உங்களுக்கும் இவ்வாறான அழைப்புகள் வந்தால் பதற்றமின்றி யோசித்து பதிலளிக்கவும். எதிர் அழைப்பினர் பணம் கேட்டால் சிந்தித்து செலாற்றவும்.

கடன் தொல்லையால் மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்! கெஞ்சியும் கேட்டு கதறிய மகள்!!
 

Latest Videos

click me!