ஆசை வார்த்தை கூறி 15வயது சிறுமியுடன் உல்லாசம்.! பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்கு- வெளியான ஷாக் தகவல்

First Published Apr 1, 2024, 10:23 AM IST

பைக் வாங்கிதருவதாக கூறி தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது  பள்ளி மாணவியின் தந்தை அளித்த புகாரின் கீழ் போக்‌சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்துவருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மீது  ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் உல்லாசத்தில் ஈடுபடுத்தியதாக பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பள்ளி மாணவியின் தந்தை புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகளின் செல்போனை எடுத்து பார்த்ததில்,  தமிழக பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் எம்.எஸ்.ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் மற்றும் படங்கள் அனுப்பியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

Singapore Child Abuse

 ஆசை வார்த்தை கூறி உல்லாசம்

இதனால் அதிர்ச்சி அடைந்த தான், இது தொடர்பாக தனது மகளிடம் விசாரித்த போது, தன்னை பள்ளிக்கு செல்ல விடாமல், பாஜக  பிரமுகரிடம் தனது  தாய் அடிக்கடி அழைத்து சென்றதாகவும், தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துசென்று தனியாக இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் வாட்ஸ் அப் மூலமாக நான் கூப்பிடும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால்  பைக் வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தையை கூறி அழைத்துசென்று பாஜக நிர்வாகி பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும் கூறியுள்ளார். 

மனைவியோடும் உல்லாசம்

மேலும் வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்கியும் பாலியல் பலாத்காரம் செய்து அதற்கு பதிலாக புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மனைவியின் கடனை அடைத்து விடுவதாக கூறி தனது மனைவியோடும் தகாத உறவில்  பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இதற்கு முழுமையாக தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

போக்சோ வழக்கு பதிவு

இந்த புகார் தொடர்பாக காவல்துறை ஆரம்பத்தில் வழக்கு பதிவு செய்யவில்லையென கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை முறையிட்டதை தொடர்ந்து காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும் மற்றும்  பள்ளி மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4),  12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை போலீசார் நடத்திவருகின்றனர். பாஜக நிர்வாகி மற்றும் கல்லூரி நிர்வாகி மீது பதியப்பட்டுள்ள போக்சோ சட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!