காதலனை நம்பி சென்ற சிறுமியை வேட்டையாடிய 7 நபர்கள்; பொள்ளாச்சியை மிஞ்சிய தேயிலை தோட்ட சம்பவம்

First Published | Jul 18, 2024, 7:40 PM IST

மேற்கு வங்கம் மாநிலத்தில் காதலனை நம்பிச் சென்ற சிறுமியை 4 சிறார்கள் உள்பட 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பைகுரி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே சிறுமியை தேயிலை தோட்டத்திற்கு வருமாறும், அங்கு சிறிது நேரம் பேசிவிட்டு செல்லலாம் என்றும் கூறி காதலன் அழைத்துள்ளான்.

காதலனை நம்பி சிறுமியும் தேயிலை தோட்டம் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த காதலனின் கூட்டாளிகள் 6 பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து சிறுமியை மிரட்டவும் செய்துள்ளனர்.

Tap to resize

பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்து சேர்ந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை வீட்டில் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 சிறார்கள் உள்பட 7 நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் போக்சோ சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Latest Videos

click me!