உதய்பூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனது பிறந்தநாள் விருந்துக்குப் பிறகு, நிறுவனத்தின் பெண் மேலாளரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெணட புகாரின் பேரில், சிஇஓ உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார் ஐ.டி நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜிதேஷ் சிசோடியா தனது பிறந்த நாளையொட்டி கடந்த 20ம் தேதி சனிக்கிழமை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் அந்த நிறுவனத்தின் பெண் மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மதுபானம் பரிமாறப்பட்டு விருந்து நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடைபெற்றது.
24
கூட்டு பாலியல் பலாத்காரம்
அப்போது பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார். இதையடுத்து காரில் பெண் மேலாளர் ஏறினார். அந்த காரில் தலைமை செயல் அதிகாரி ஜிதேஷ் சிசோடியா மற்றும் பெண் உயர் அதிகாரியின் கணவர் சரோஹி ஆகியோரும் இருந்தனர். அப்போது மயக்க நிலையில் இருந்த பெண் மேலாளரை ஜிதேஷ் சிசோடியா, சரோஹி ஆகியோர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
34
காவல் நிலையத்தில் புகார்
பின்னர் அவரை வீட்டில் இறங்கிவிட்டு சென்றுள்ளனர். மறுநாள் மயக்கம் தெளிந்த பின்பு தான் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பெண் மேலாளர் உணர்ந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் பரபரப்பு புகாரை அளித்தார். அப்போது தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி கொடுத்ததாகவும், அதை உட்கொண்ட பிறகு சிறிது நேரத்தில் தான் மயக்கமடைந்தேன். . பின்னர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பிறகு ஜிதேஷ் சிசோடியா, சரோஹி மற்றும் உடந்தையாக இருந்த பெண் உயர் அதிகாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். பெண் மேலாளர் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.