கோவையில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டில் வேறு பெண்ணுடன் கணவர் இருந்ததை கண்ட மனைவி, அவர் மதுபோதையில் தூங்கியபோது அவரது மர்ம உறுப்பை வெட்டியுள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் ஹசாரிகா (33). கோவையில் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜிந்தி. இந்த தம்பதி கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிதான் ஹசாரிகாவுக்கு வடமாநில பெண்கள் பலருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. அவர் அடிக்கடி அவர்களுடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
24
கணவன் மனைவி இடையே சண்டை
இந்த விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவ்வளவு களேபரத்தின் மத்தியிலும் கணவர் பிதான் ஹசாரிகா அடிக்கடி பெண்களுடன் பழகியும், பேசியும் வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ஜிந்தி வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்த போது பிதான் ஹசாரிகா வீட்டிற்கு இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். வெளியில் சென்ற மனைவி வீட்டிற்கு வந்து பார்த்த போது கணவர் கட்டிலில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
34
ஆத்திரத்தில் மனைவி
இதனால் கணவர் மீது கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி ஜிந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சொந்த ஊரான அசாம் மாநிலத்திற்கே சென்று விடுமாறு பிதான் மிரட்டியுள்ளார். எவ்வளவு சொல்லியும் அடங்காத கணவருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என ஜிந்தி தீர்மானித்தார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிதான் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
கணவர் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஜிந்தி கத்தியை எடுத்து வந்து பிதானின் மர்ம உறுப்பை வெட்டி அறுத்துள்ளார். பின்னர் கணவரை அதே அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு மனைவி ஜிந்தியை கைது செய்தனர்.