ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?

Published : Dec 05, 2025, 12:30 PM IST

Theni Crime News: தேனி மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்சியிலிருந்து பேருந்தில் கடத்திவரப்பட்ட மெத்தபட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

PREV
14

தேனி மாவட்ட காவல்துறையினருக்கு திருச்சியில் இருந்து பேருந்தின் மூலமாக போதைப் பொருளான மெத்தபட்டமைன் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் திருச்சியிலிருந்து தேனிக்கு வந்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

24

அப்போது ஒரு வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து கொண்டார். இதனையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீஸ் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது சர்வதேச போதைப் பொருளான மெத்தபட்டமைன் அவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை பிடித்து தேனி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

34

அப்போது அவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பதும் அவர் திருச்சியில் இருந்து ராஜேஷ் என்பவரிடம் இந்த போதைப் பொருளை வாங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவர் திருச்சியில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு விற்பனைக்காக இதனை வாங்கி வருவதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

44

இதனையடுத்து அவரிடம் இருந்த 22 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories