35 வயது ஆன்ட்டி மீது க.காதல்..! ஆசை ஆசையாய் இரவு வீட்டிற்கு சென்ற போது நடுரோட்டில் ஹரீஷ் அலறல்..! நடந்தது என்ன?

Published : Dec 04, 2025, 01:07 PM IST

ஓசூரில் அதிமுக பிரமுகரின் கார் ஓட்டுநரான ஹரீஷ் என்பவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. இந்த கொலை கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்ததா அல்லது தொழில் போட்டி காரணமாக நடந்ததா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
14
அதிமுக பிரமுகரின் கார் ஓட்டுநர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரத்தை சேர்ந்தவர் நாராயணப்பா மகன் ஹரீஷ் (32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அதிமுக பிரமுகருக்கு கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். ஹரீஷ் ஓட்டுநர் வேலையுடன் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார்.

24
திருமணமான பெண்ணுடன் தொடர்பு

இந்நிலையில் இவருக்கும் ஓசூர் வானவில் நகரில் கருத்து வேறுபாடு கணவரை பிரிந்து மகன், மகளுடன் வசித்து வரும் 35 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வருவதை ஹரீஷ் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஹரீஷ் அங்கிருந்து ஸ்கூட்டரில் வானவில் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

34
நடுரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை

அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹரீஷ் ஸ்கூட்டரை அங்கேயே போட்டுவிட்டு ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

44
தொழில் போட்டியால் கொலையா?

இதனை அவ்வழியாக நடைபயிற்சி வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓசூர் அட்கோ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories