ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!

Published : Dec 04, 2025, 09:37 AM IST

பெரம்பூர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதேநேரம், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு இடைக்கால ஜாமீன்.

PREV
14
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்பட 27 கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கிடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் மொட்டை கிருஷ்ணன், சம்போ செந்தில் உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

24
12 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதலில் சிபிஐக்கு மாற்றியதை அடுத்து அஸ்வத்தாமன், அஞ்சலை, பிரதீப் உள்ளிட்ட 14 ஜாமீன் கேட்ட நிலையில் 12 பேருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

34
ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதேபோல், வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு புறம் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

44
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த மூன்று மனுக்களும் நீதிபதி ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதி மூன்று மனுக்கள் மீதான விசாரணையை டிசம்பர் 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories