தேசிய தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் பயங்கரவாத எச்சரிக்கையை விடுத்துள்ளன. செங்கோட்டை அருகே லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன. பயங்கரவாதிகள் குறிப்பாக சாந்தினி சௌக்கில் உள்ள முக்கிய கோவிலை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் பிப்ரவரி 6 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு, அந்த அமைப்பு இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல்கள் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள் செங்கோட்டை, சாந்தினி சவுக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மதத் தலங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளன. நெரிசலான பகுதிகளில் கூடுதல் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.