புதுச்சேரியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது டெல்லி யு-23 கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெரிய வந்ததால் டெல்லி மாவட்ட கிரிக்கெட் வீரர்களை ஹோட்டலில் நிர்வாகம் உடனடியாக வெளியேற்றி வேறு ஹோட்டலுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இது குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணையையும் தொடங்கியுள்ளது,
டெல்லி வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள்
இதுபோன்ற சம்பவங்கள் விளையாட்டின் கண்ணியத்தை கெடுக்கும், அமைப்பின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளன. ஆனாலும், இதனை மறுத்து, ‘‘வீரர்கள் வெறுமனே இசையைக் கேட்டுக்கொண்டு இருந்ததாகவும், மைனர் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எந்த வழக்கும் பதிவாகவில்லை என்றும் டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் அமித் குரோவர் கூறினார்.