ஓவர் ஆக்டிங் போட்ட 30 வயது டீச்சர்.! நைட்டோடு நைட்டா க.காதலனுடன் சேர்ந்து பத்மா செய்த வேலை! காலையில் பூ, பொட்டுடன்!

Published : Dec 29, 2025, 01:01 PM IST

தெலங்கானாவில், கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை ஆசிரியை ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். கணவர் இறந்ததாக நாடகமாடிய நிலையில், இறந்தவரின் தம்பி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்தது. 

PREV
14
தொடக்கப்பள்ளி ஆசிரியர் பத்மா

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட் நகரில் உள்ள மாருதி காலனியை சேர்ந்தவர் லக்ஷ்மன்நாயக்(38). இவரது மனைவி பத்மா(30). தொடக்கப்பள்ளி ஆசிரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கோபி (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

24
கள்ளக்காதலுக்கு இடையூறு

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி பத்மாவை கண்டித்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த பத்மா கணவனை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் திட்டமிட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி லக்ஷ்மன்நாயக் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது கள்ளக்காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்து பத்மா, லக்ஷ்மன்நாயக்கின் முகத்தை துணியால் அழுத்தி கொலை செய்துள்ளனர்.

34
மரணத்தில் சந்தேகம் காவல் நிலையத்தில் புகார்

மறுநாள் காலையில் எதுவும் தெரியாதது போல பூ, பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் இருந்தபடி தனது வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து, எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை. பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. ஆகையால் வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார். அவர் வீட்டுக்கு வருவதற்குள் மனைவி பத்மா வீட்டிற்கு வந்து கணவர் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதனிடையே தனது அண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

44
பத்மா கள்ளக்காதலன் கைது

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் பேரில் மனைவி பத்மாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கோபியுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததாக கூறினார். இதனையடுத்து பத்மா, கோபி இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories