சென்னை, மணலி பகுதியை சேர்ந்தவர் திருமணி ஆவார். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
24
திருமணியின் மனைவி அருகே உள்ள பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குறிப்பிட்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
44
இதனடிப்படையில் போலீசார் திருமணியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.