நாளுக்கு நாள் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
அந்தவகையில் தற்போது தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பாலியல் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
வளசரவாக்கம், அம்பேத்கர் சாலையிலுள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்த போது, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி, 54, என்பவர், இரு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.