நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள தேத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி துர்கா தேவி (38). துர்காதேவி கடந்த 18ம் தேதி இரவு வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் புஷ்பவனம் கடற்கரையில் தலையில் ரத்த காயங்களுடன் துர்காதேவியின் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் அருணை பிடித்து விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அருண் வாட்ஸ் அப்பில் மளிகை பொருட்கள் விற்கும்போது கடந்த மே மாதம் துர்காதேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது துர்காதேவிக்கு அருண் செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று புஷ்பவனம் கடற்கரையில் துர்காதேவியுடன் மருத்துக்கல்லூரி மாணவர் அருண் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது துர்காதேவி, அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது துர்காதேவி, பணம் தராவிட்டால் கள்ள உறவை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார்.