இவ்வழக்கு சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் அவர்கள் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட தனிப்படையினரின் விசாரணையில், இறந்து போன முத்தையா என்பவர் அப்புவிளையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தங்கையை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்ததாகவும், அதனை அவரது தங்கை சுரேஷிடம் சொல்லி அழுதுள்ளதாகவும், ஏற்கனவே சுரேஷின் தங்கை இறந்து போன முத்தையாவின் உறவினரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு நடைபெற்று வருவதாகவும், இதனால், ஒரு மாதத்திற்கு முன்பு சுரேஷ் முத்தையாவை எச்சரித்துள்ளார். அதன் பின்பும் 22.07.2023-ம் தேதி மதியம் சுரேஷின் தங்கையை முத்தையா கிண்டல் செய்து தன்னை காதலிக்க வற்புறுத்தியதாகவும்.