கோவையைச் சேர்ந்த 25 வயது பட்டதாரி பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனமாக 100 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் சீர்வரிசையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். திருமணம் நடந்த சில நாட்களுக்கு பிறகு மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மேலும், கணவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருப்பதும், வயாகரா இல்லாமல் அவரால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதும் தெரியவந்தது.