இப்படியும் ஒருத்தன் கொலை செய்வானா.. ஷிரத்தா எலும்பை கிரைண்டிங் மிஷினால் பவுடர் ஆக்கிய அப்தாப்? வெளியான பகீர்.!

First Published | Feb 8, 2023, 2:40 PM IST

தலைநகர் டெல்லியை அதிர வைத்த ஷிரத்தா 35 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஷிரத்தாவின் எலும்பு துண்டுகளை பளிங்கு வெட்டும் இயந்திரத்தை கொண்டு துண்டாக்கி கிரைண்டிங் மிஷினால் பவுடர் ஆக்கிய அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. 

மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷிரத்தா (26). இவர் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள கால்சென்டரில் பணியாற்றி வந்தார். அப்போது, அஃப்தாப் அமீன் பொன்னவாலா என்பவருடன் ஷிரத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதததலாக மாறியுள்ளது. இவர்கள் காதலுக்கு  ஷிரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆகையால், பெற்றோரை விட காதலன் தான் முக்கிய என்று நினைத்த ஷிரத்தா, மும்பையின் வாசி பகுதியில் அஃப்தாப் உடன் தனி வீட்டில் வாழத் தொடங்கினார். 
மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொல்லை கொடுப்பார்கள் என்பததால் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து, டெல்லியில் மெஹ்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். நாளடைவில்  அஃப்தாப் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த ஷிரத்தா தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

Tap to resize

இதனிடையே, மகளின் டெல்லி வீட்டை அவரது தந்தை கண்டுபிடித்தபோது, அவர் அங்கு இல்லை. எனவே மகளை காணவில்லை என தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில் தான் ஷிரத்தாவை அஃப்தப் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்திகளை எடுத்து வந்து  35 துண்டுகளாக வெட்டி தனித்தனி பிளாஸ்டிக் கவரில் சுற்றி பிரிட்ஜில் வைத்தேன் என்ற அதிர்ச்சி வாக்குமூலத்தையும் அளித்தார். நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்தேன் என்று கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக, நாளுக்கு நாள் புதிய தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ஷிரத்தாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை வெட்டிய பிறகு, அவரின் எலும்பு துண்டுகளை பளிங்கு வெட்டும் இயந்திரத்தை கொண்டு துண்டாக்கி கிரைண்டிங் மிஷினில் போட்டு அப்தாப் பவுடர் ஆக்கியுள்ளார். 

கொலை செய்த மூன்று மாதங்களுக்கு பிறகு, ஷிரத்தாவின் தலையை அப்தாப் அப்புறப்படுத்தி இருக்கிறார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான், காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், எப்படி கொலை செய்யப்பட்டது, உடல் பாகங்கள் எப்படி அப்புறப்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் 6,600 பக்க குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த கொலை தொடர்பாக  அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!