இதையடுத்து அந்த நபரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு இனிமா கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் வயிற்றில் வைத்து அவர் கடத்தி வந்தது போதை பொருள் என தெரியவந்துள்ளது. போதை பொருளை 86 மாத்திரை கேப்சூல்களில் அடைத்து அந்த நம்பர் விழுங்கியது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க:தீவிரவாதிகளின் பிடியில் தமிழ்நாடு.. ஆளுநர் மாளிகையில் அலறிய பாஜக மாநில து.த கே.பி ராமலிங்கம்.
அதில் இருந்தது ஹெராயின் போதை மாத்திரைகள் என கண்டறிந்தனர் அதிகாரிகள் ரூபாய் 8 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 266 கிராம் எடை கொண்ட ஹெராயின் போதை மாத்திரையை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தான்சானிய நாட்டு வாலிபர் ஜோசப் கைது, செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து யாருக்கு கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.