மாமா மர்கையா... ‘லவ் டுடே’ பாணியில் பெண்ணிடம் போனை மாற்றி வசமாக மாட்டிக்கொண்ட மணமகன் - போக்சோவில் கைது..!

First Published | Jan 22, 2023, 12:17 PM IST

லவ் டுடே பாணியில் நிச்சயமான பெண்ணுடன் போனை மாற்றிக்கொண்ட மணமகன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான சம்பவம் சேலத்தில் அரங்கேறி உள்ளது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ரிலீஸான படம் லவ் டுடே. காதலிக்கும் ஆணும், பெண்ணும் தங்களது செல்போனை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டபின் அதனால் என்னென்ன நடக்கும் என்பதை எதார்த்தமாக காட்டியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்நிலையில், அப்படத்தைப் போலவே நிஜத்திலும் ஒருவர் நிச்சயமான பெண்ணுடன் தனது போனை மாற்றிக் கொண்டு தற்போது போக்சோவில் கைதாகி இருக்கிறார்.

அரவிந்த்

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாழப்பாடியை சேர்ந்த பெண் ஒருவருடன் நிச்சயமாகி உள்ளது. அந்த பெண் லவ் டுடே படத்தின் பாணியில் நாம் இருவரும் செல்போனை மாற்றிக் கொள்ளலாம் என அரவிந்திடம் கூறி இருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாத அரவிந்த், சம்மதித்து தனது போனை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... திண்டுக்கல்லில் வளர்ப்பு நாயை நாய் என்று அழைத்த முதியவர் குத்தி கொலை

Tap to resize

அரவிந்தின் போனை தீர ஆராய்ந்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஸ்கூல் படிக்கும் பெண்ணின் நிர்வாண வீடியோ இருந்துள்ளது. அரவிந்த் அந்த பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்தது தெரியவந்ததை அடுத்து, அரவிந்த் செய்த லீலைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளார் அந்த நிச்சயமான பெண். உடனடியாக அந்த வீடியோவில் இருக்கும் மாணவியின் பெற்றோரை தொடர்புகொண்டு விஷயத்தை கூறி இருக்கிறார். 

Arrest

இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர், அரவிந்த் மீது வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் அரவிந்தை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி நிச்சயமான அந்த பெண், அரவிந்தை திருமணம் செய்துகொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... காதலியுடன் நெருக்கமாக இருந்த காதலன்! தங்கை முறை உறவு.. இளைஞனின் ஆசையால் சீரழிந்த குடும்பம்

Latest Videos

click me!