ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘மனசெல்லாம்’ சீரியலில் இருந்து ஹீரோ விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளுக்கு அடுத்தபடியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘மனசெல்லாம்’ என்கிற தொடர் ரசிகர்களிடையே ஆதரவை பெற்று வந்த நிலையில், அந்தத் தொடரில் அருள் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் ஜெய்பாலா திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
24
ஜெய்பாலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஜெய்பாலா என்னும் அருளாகிய நான் ‘மனசெல்லாம்’ தொடரில் இருந்து விலகிக் கொள்கிறேன். 102 எபிசோடுகள் மற்றும் ஆறு மாதங்கள் இந்த பயணம் இனிதாக இருந்தது. எனக்கு ஆதரவளித்த சக நடிகர்கள், டெக்னீசியன்கள் அனைவருக்கும் எனது ஆழ்மனதிலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிருந்து விடை பெறுவது கடினமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்க்கை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்த என்னுடைய இயக்குனர் மற்றும் குழுவினருக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
34
ரசிகர்களுக்கு நன்றி
மேலும் தன்னை விரும்பிய, அருள் கதாபாத்திரத்தை மிகப்பெரிய உயரத்திற்குக் கொண்டு சென்ற என்னுடைய ரசிகர்கள், சகோதர, சகோதரிகள், என் மீது அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
ஜெய்பாலாவுக்குப் பதிலாக சன் தொலைக்காட்சியில் ‘திருமகள்’, ‘மலர்’ போன்ற தொடர்களில் நடித்த நடிகர் சுரேந்தர் இனி அருள் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சுரேந்தரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.