Karthigai Deepam: பரமேஸ்வரி பாட்டி சொன்ன வார்த்தை? கோபத்தில் சாமுண்டீஸ்வரி கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Feb 28, 2025, 11:09 AM IST

எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில், இன்றைய எபிசோடில் நடைபெற உள்ளது என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.  

PREV
15
Karthigai Deepam: பரமேஸ்வரி பாட்டி சொன்ன வார்த்தை? கோபத்தில் சாமுண்டீஸ்வரி கார்த்திகை தீபம் அப்டேட்!
பேரன்களுடன் வந்த பரமேஸ்வரி பாட்டி

சாமுண்டேஸ்வரி மனதில் வேறு ஒரு திட்டத்தை வைத்து கொண்டு, இந்த மகள் ரேவதி திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். மேலும் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி தன்னுடைய பேரன்களுடன் திருமண மண்டபத்திற்கு வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

25
உங்களை யார் உள்ள விட்டது?

மகள் திருமணத்திற்கு, அனைவரையும் அன்போடு அழைத்து வரும் சாமுண்டீஸ்வரி, பரமேஸ்வரி பாட்டியை பார்த்ததும் உங்களை யார் உள்ள விட்டது? நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? என உச்ச கட்ட கோபத்தில் பேசுகிறார். பாட்டியின் வருகையால் அவருடைய மனநிலையும் மாறி டென்சன் ஆகிறார்.

Karthigai Deepam: திருமணத்தை நிறுத்த பரமேஸ்வரி பாட்டியோடு வந்த இருவர்? கார்த்திகை தீபம் அப்டேட்!

 

35
சாமுண்டீஸ்வரியின் கேள்விக்கு பதிலடி:

சாமுண்டீஸ்வரியின் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரேவதி உனக்கு மட்டும் பொண்ணு இல்ல. என் பையன் ராஜராஜனோட பொண்ணு. என்னோட பேத்தி. நீ கூப்பிட்டாதான் இங்க வருணும் அப்படிங்கிற அவசியம் எனக்கு இல்ல. கூப்பிடலானாலும் நான் கல்யாணத்திற்கு வருவேன். இப்போ என்னோட பேத்தி கல்யாணத்தை பார்க்க வந்திருக்கேன் அப்படினு சொல்கிறார்.

45
என் பேரனுக்கு பேத்தியை திருமணம் செய்து கொடு

இப்படியே இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், மீண்டும் கார்த்திக்குக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, என் பேரனுக்கு... என் பேத்தியை ரேவதியை  கட்டி கொடு என்று சொல்கிறார். சாமுண்டேஸ்வரி, பாட்டியை பார்த்து 'ஓ இப்படி ஒரு நினைப்பு வேற உங்களுக்கு இருக்கா? அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்ல என கூறிவிட்டு நகர்ந்து செல்கிறார்.

மகேஷ் - மாயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி; சாமுண்டீஸ்வரியின் புது பிளான்? கார்த்திகை தீபம் அப்டேட்!

55
என்ன நடக்க போகிறது:

இப்படியான நிலையில், பரமேஸ்வரி பாட்டி ராஜராஜனிடம் கார்த்தியின் மூத்த சகோதரர்களான அருண் மற்றும் ஆனந்தை அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னர் பரமேஸ்வரி பாட்டியிடம் வந்து பேசும் கார்த்திக் ஏன் பாட்டி இப்படியெல்லாம் பேசி வங்காள கோப படுத்துறீங்க என கூறுகிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது? சாமுண்டேஸ்வரி எப்படி தன்னுடைய மகள் திருமணத்தில் மாப்பிளையை மாற்ற போகிறார் என்பதை தெரிந்து கொள்ள கார்த்திருப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories